×

ஏற்காட்டில் வசந்த காலத்தை வரவேற்று பூத்து குலுங்கும் பூக்கள்

ஏற்காடு : ஏற்காட்டில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக்குலுங்கி வருவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து குலுங்குகிறது. இந்த மரங்களிலிருந்து கீழே விழும் பூக்கள், காற்றில் பறந்து வருவதையும், தரையில் ஒரு இளஞ்சிவப்பு மலர்ப்படுகை போல அமைந்துள்ளது.

இலைகளை மறைத்தவாறு, இலைகளே தெரியாமல் பூக்கள் மலர்ந்திருக்கும் ரோசி டிரம்பெட் என்கிற மரமே இது. இந்த மலர்கள் டிரம்பெட் இசைக்கருவியை ஒத்திருப்பதால் இந்த மரத்துக்கு இப்படிப் பெயர் வந்துள்ளது. தமிழில் இந்த மரத்துக்கு வசந்த ராணி என்கிற பெயர் வழங்கப்படுகிறது.

இந்த மரங்களில், சில அடர் இளஞ்சிவப்பு நிறத்திலும், சில வெளுத்த இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்களைக் கொண்டுள்ளன. அதே நேரம் இரண்டு மரங்களையும், ஒரே வகையாகவே தாவரவியலாளர்கள் வகைப்படுத்தி உள்ளனர். இந்த மரங்களில் பூக்கும் காலம் மார்ச் முதல் மே வரை, அநேகமாக மார்ச் மத்தியில் இந்த மரங்களில் பூக்கள் பூத்திருக்கும்.

தற்போது ஏற்காடு தாவரவியல் பூங்கா, மலைப்பாதை என பல பகுதிகளில் இந்த மரங்களைக் காண முடிகிறது. மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags : Yercaud ,Yercaud, Salem district ,
× RELATED தேர்தல் நாளன்று முதியோர்,...