திருவாரூர்,ஏப்.21: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களை 2ம் கட்டமாக தேர்வு செய்யும் பணி ரேண்டம் முறையில் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 23ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
