×

தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க துறையூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

 

துறையூர், ஏப்.21: சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க துறையூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் காவல் நிலையம் சார்பில் கொடி அணி வகுப்பு நேற்று நடைபெற்றது. துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்காளர்கள் துணையாக நாங்கள் இருக்கிறோம் என கூறும் வகையில் துறையூர் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ், உப்பிலியபுரம் இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் தலைமையில் கொடி
அணி வகுப்பு பேரணி துறையூர் காவல் நிலையத்தில் இருந்து திருச்சி சாலை வழியாக பாலக்கரை சென்று மீண்டும் காவல் நிலையத்தை வந்து நிறைவடைந்தது.

Tags : flag march ,Thuraiyur ,march ,Legislative Assembly ,Uppiliyapuram Police Stations ,Trichy district ,Thuraiyur Legislative Assembly… ,
× RELATED துவரங்குறிச்சி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து