×

10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா டைடல் பார்க் அமைக்க முயற்சி மேற்கொள்வேன்

 

தஞ்சாவூர், ஏப்.21: 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மெகா டைடல் பார்க் அமைக்க முயற்சி மேற்கொள்வேன் என தஞ்சை திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று (21ம் தேதி) மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்.ராமநாதன் தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் வேட்பாளர் சண். ராமநாதனை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை வேட்பாளர் சண்.ராமநாதன் மருத்துவ கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதி டீக்கடையில் வடை சுட்டு ஆதரவு திரட்டினார்.தொடர்ந்து தஞ்சை மாநகராட்சி கோட்டம் 2,3 ஆகியவற்றில் தூய்மை பணியாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Thanjavur ,DMK ,San. Ramanathan ,Tamil Nadu Assembly ,
× RELATED துவரங்குறிச்சி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து