×

வெடி பொருட்கள் விற்பனை கடைகள் மூடவேண்டும்

 

பெரம்பலூர்,ஏப்.21: சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு இன்று (21 ஆம்தேதி முதல், 24ஆம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு மேமாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையும் அனைத்து வெடிப் பொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று மாவட்ட தேர்தல்அலுவலரான கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் நாளை மறுநாள் (23ஆம்தேதி) நடைபெறுவதை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து வெடிப் பொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிப்பொருள் கிட்டங்கிகள் ஆகியவை, வாக்குப் பதிவை முன்னிட்டு இன்று (21ஆம்தேதி) முதல் வருகிற 24ஆம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு வருகிற மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையிலும் மூடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Perambalur ,Legislative Assembly General Election ,
× RELATED சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா