- திருச்சி
- லியோனி
- திண்டுக்கல் லியோனி
- கீழப்புத்தூர், பாலக்கரை, திருச்சி
- திமுக
- இனிகோ இருதயராஜ்
- திருச்சி கிழக்கு
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் உள்ள டீக்கடை முன் திண்டுக்கல் லியோனி நேற்றுமுன்தினம் இரவு பிரசார வாகனத்தில் நின்றவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல், விசில் ஊதியவாறே ஆயுதங்களுடன் கூச்சலிட்டு கொண்டிருந்தனர். திடீரென பிரசார வாகனம் மீது தொடர்ச்சியாக சோடா பாட்டில்களை வீசினர். வாகனத்தில் பட்டு கண்ணாடிகள் உடைந்து சிதறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த லியோனி, தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் ெதாடர்பாக பாலக்கரை காவல் நிலையத்தில் லியோனி புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். இது குறித்து திண்டுக்கல் லியோனி வெளியிட்டுள்ள வீடியோவில்,‘‘ அனைவருக்கும் வணக்கம், நான் கடந்த 16 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடும் ேபாது, ஒரு சிலர் என் மீது பாட்டில் வீசினர். தோல்வி பயத்தில் எதிர்கட்சிகள் செய்யக்கூடிய அநாகரிமான செயல். இந்த சலசலப்புக்கு நான் அஞ்சமாட்டேன். தொடர்ந்து, வீரியத்துடன் பிரசாரம் இருக்கும். தோல்வி பயத்தில் இருக்கும் எதிர்கட்சிகள் இதுபோன்ற கீழ்த்தரமான செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
