×

தமிழகம் முழுவதும் ரூ.1223 கோடி பறிமுதல்

 

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24X7 நேரமும் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 20ம் தேதி அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி ரொக்கம் ரூ.169.85 கோடி, மதுபானம் ரூ.2.95 கோடி, போதைப்பொருட்கள் ரூ.82.73 கோடி, விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம், வெள்ளி) ரூ.650.87, இதர பொருட்கள், இலவசங்கள் ரூ.306.34 என மொத்தம் ரூ.1212.74 பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையில் சுமார் ரூ.495 கோடி தொகையானது, முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததன் அடிப்படையில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறோ அல்லது அலைக்கழிப்போ இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Electoral Officer ,Archana Patnaik ,Tamil Nadu Assembly General Elections ,
× RELATED தமிழகம் முழுவதும் தலைவர்கள்...