×

மக்களுக்கு இஸ்ரேலை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: ட்ரம்ப்

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, இஸ்ரேல் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் வலைதள பதிவில்;
மக்கள் இஸ்ரேலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளனர். அவர்கள் துணிச்சலானவர்கள், விசுவாசமானவர்கள் மற்றும் புத்திசாலிகள் ஆவர்.

மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய மற்றவர்களைப் போலன்றி, இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது. மேலும், எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதையும் அது நன்கு அறியும் என அவர் கூறியுள்ளார்.

Tags : Israel ,America ,Trump ,Washington ,Middle East ,US ,President Donald Trump ,Truth ,
× RELATED தங்கம், வெள்ளி விலை உயர்வைச்...