×

ஃபிடே உலக சிறுமியர் ரேபிட் செஸ்: ஷர்வானிகா சாம்பியன்; 11 வயது அரியலூர் சிறுமி அசத்தல்

விரின்ஜகா பாஞ்சா: செர்பியாவில் நடந்த 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான ஃபிடே உலக ரேபிட் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை ஷர்வானிகா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். செர்பியாவின் விரின்ஜகா பாஞ்சா நகரில் 12 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான ஃபிடே உலக ரேபிட் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் தமிழகத்தின் அரியலூரை சேர்ந்த 11 வயது வீராங்கனை ஷர்வானிகா பங்கேற்றார். மொத்தம் 11 சுற்றுகள் நடந்த இப்போட்டிகளில் ஷர்வானிகா 10ல் வெற்றி பெற்றார். உக்ரைன் வீராங்கனை டாரியா கிராவ்சுக் உடனான ஒரு போட்டியில் மட்டும் ஷர்வானிகா டிரா செய்தார். குறிப்பாக, 9வது சுற்றில் போட்டியின் முதல் நிலை வீராங்கனையான ஸ்லோவேனியா நாட்டின் எமா ஜாக்ஸாவை ஷர்வானிகா வீழ்த்தி வியப்பில் ஆழ்த்தினார்.

11 சுற்றுகள் முடிவில் 10.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஷர்வானிகா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கஜகஸ்தானை சேர்ந்த, 3 முறை மகளிர் கேண்டிடேட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள ஷோல்பான்பெக் ஜான்ஸயா, 7.5 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். ஷர்வானிகா, உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக ஷர்வானிகா தற்போது பெற்றுள்ளார். இதற்கு முன், 10வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ரேபிட் செஸ் போட்டியில் ஷர்வானிகா சாம்பியன் பட்டம் வென்றார். தவிர, கடந்த 2024ல், அல்பேனியாவில் நடந்த ஃபிடே உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஷர்வானிகா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : FIDE World Girls Rapid Chess ,Sharvanika ,Ariyalur ,Virinjaka Panca ,Tamil Nadu ,FIDE World Girls Under-12 Rapid Chess Championship ,Serbia ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு...