×

உறையூர் களத்துமேடு இளநீர் மாரியம்மன் கோயிலில் கரக உற்சவ விழா துவக்கம்

திருச்சி, ஏப்.18: திருச்சி மாநகர் உறையூர் களத்துமேட்டிலுள்ள ஓம் ஸ்ரீ இளநீர் மாரியம்மன் கோவிலின் 33ம் ஆண்டு கரக உற்சவ விழா நேற்று காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காவிரியாறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து இளநீர் கரகம், பால் மற்றும் தீர்த்தக் குடங்கள், அலகு செட்டு, அக்னி சட்டிகளுடன் மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடையும். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுடன் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை தில்லைநகர் செங்குத்தான் கோயிலுக்கு மாவிளக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு காவிரியாற்றில் விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 

Tags : Karaka Utsava festival ,Uraiyur Kalathumedu Ilanir Mariamman Temple ,Trichy ,Om Sri Ilanir Mariamman Temple ,Uraiyur Kalathumedu, ,Trichy City ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 8,035 பேரிடம் தபால் வாக்கு சேகரிப்பு