×

புத்தாநத்தம் அருகே அரசு மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

மணப்பாறை, ஏப்.18: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் அரசு மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கருமலை அருகே உள்ள வெள்ளக்குளத்துப்பட்டியில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த பூத்தாம்பட்டியை சேர்ந்த திருமால் மகன் அழகுசுந்தரம்(38) என்பவர் கள்ளச்சந்தையில் மதுவிற்றது தெரியவந்து, கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 34 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1770யை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Tags : Buthanantham Manapara ,Madanantham ,Manapara, Tirichi district ,Manapara ,Uthannatam Police ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 8,035 பேரிடம் தபால் வாக்கு சேகரிப்பு