×

துவரங்குறிச்சி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

துவரங்குறிச்சி, ஏப். 17: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே பொன்னம்பட்டி ஊரணி குளம் அருகே தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு இரை தேடி வந்துள்ளது. இதைக்கண்ட தோட்டத்தின் உரிமையாளர் அஜித் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் நிலை அலுவலர் மனோகர் மற்றும் வேல்முருகன், இசக்கி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை சிறிது நேர போராட்டத்திற்கு பின் பாம்பு பிடிப்பான் உதவியுடன் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் தோட்ட பகுதியில் விவசாய பகுதிகளில் ஈடுபடும் விவசாயிகள் கவனமுடன் விவசாய பணியில் ஈடுபட வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Thurangurichy, Ap. 17 ,Ponnambatti Urani Pond ,Thuvarangurichi, Tiruchi-district ,Ajit Thuvarangurichi ,
× RELATED தொகுதி மறு வரையறை எதிர்த்து...