- உமநாத்
- Icourt
- சென்னை
- வழக்கறிஞர்
- மோகன்தாஸ்
- சென்னை உயர் நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் முதலமைச்சரின் செயலாளர் உமாநாத் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வழக்கறிஞர் மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு, தலைமை நீதிபதிதர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், முதலமைச்சரின் செயலாளருக்கு எதிராக வெறும் அச்சத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், ஏப்.20ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு ஆணை யத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
