×

திருவிக நகர் தொகுதி பொன்னியம்மன் தெரு மக்களுக்கு மனை பட்டா வழங்க நடவடிக்கை

சென்னை, ஏப்.18: திருவிக நகர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ரவிச்சந்திரன், நேற்று 76வது வட்டம் செல்லப்பா தெரு, இந்திராகாந்தி சிலை அருகில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, ஓட்டேரி பொன்னியம்மன் தெரு, 1, 2, 3வது தெரு பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்ேபாது, வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் பேசுகையில், ‘தொகுதிக்கு உட்பட்ட பொன்னியம்மன் தெரு, 1, 2, 3வது தெரு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல்கட்டமாக பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் திராவிட மாடல் அரசு, கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்களுக்காக மகளிர் உரிமை தொகை ஆயிரம், மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன்உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்னை வெற்றிபெற செய்தால் தொகுதி மக்களின் நலனுக்கு பாடுபடுவேன். தொகுதி மக்களுக்கு உழைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டும் என்றாலும் என்னை அழைக்கலாம். எனவே, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்,’ என்றார். பிரசாரத்தின்போது, பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, சசிகுமார் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உடன் சென்றனர். இதனிடையே கே.எஸ்.ரவிச்சந்திரனை ஆதரித்து மநீம தலைவர் கமலஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Ponniyamman Street ,Thiruvik Nagar ,Chennai ,DMK ,K.S. Ravichandran ,76th circle ,Chellappa Street ,Indira Gandhi statue ,Otteri Ponniyamman Street ,1st, 2nd ,street ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...