தா.பழூர் ஏப். 17: சாலை விபத்தில் மயங்கி கிடந்த லாரி டிரைவரின் பணம் ஸ்மார்ட் போன் மற்றும் உடமைகளை ஒப்படைத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு குவிகிறது. தா.பழுர் அடுத்த காரைக்குறிச்சி அருகில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு கிடந்த பெங்களூருவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஏழுமலை என்பவரை டி பழுர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் விபத்தில் பாதிக்கபட்டவரின் ரூ 26630, ஸ்மார்ட் போன், லாரி சாவி மேலும் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் விபத்தில் காயமுற்றவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, உடைமைகளை ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸின் அவசர மருத்துவ உதவியாளர் சுமித்திரா, பைலட் ராமநாதன் ஆகியோரை பொதுமக்கள் மருத்துவர்கள் பாராட்டினர்.
