மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஏப்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் வசித்து வருபவர் கார்த்தி(22). இவர் லாரி புக்கிங் ஆபீசில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், ஓசூர் – ராயக்கோட்டை சாலை பி.செட்டிப்பள்ளி பகுதியில் டூவீலரில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கார்த்தியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கெலமங்கலம் போலீசார், கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: