சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது

வேப்பனஹள்ளி, ஏப்.11: வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக தாசெகவுனிப்பள்ளி, நாடுவனப்பள்ளி மற்றும் பல இடங்களில் மின்கம்பிகள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதன் காரணமாக வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்ததால், அவற்றை மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி மேற்கொண்டனர். மரங்களை அகற்றி மீண்டும் மின் இணைப்பு வழங்கி மின் விநியோத்தை சரி செய்தனர். இதன் காரணமாக நேற்று மதியம் 3மணி வரை மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: