சென்னை: வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களான நாளை மற்றும் ஏப். 18, 19 தேதிகளில் கிளாம்பாக்கம், கோயம்பேடு , மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் . கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 295 பேருந்துகளும், ஏப்ரல் 18ல் 310 பேருந்துகளும் இயக்கம். கோயம்பேட்டியில் இருந்து நாளை மற்றும் 18ம் தேதி தலா 55 பேருந்துகள், மாதவரத்திலிருந்து தலா 20 பேருந்துகள் இயக்கபடும்.
