×

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக பட்டாசு வெடித்த அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

நெல்லிக்குப்பம், ஏப். 16: தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக பட்டாசு வெடித்த அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர அதிமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு அதிமுக நகர செயலாளர் சேகர் தலைமையிலான நிர்வாகிகள் அலுவலகத்தில் இருந்து பேரணியாக அம்பேத்கர் சிலைக்கு நடந்து சென்றனர்.அப்போது அங்கு வந்த பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி தேர்தல் நடத்தைக்கு முரணாக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சரவெடி பட்டாசு வெடித்தனர். இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரின்பேரில், அதிமுக வேட்பாளர் மோகன், நகர செயலாளர் சேகர், அய்யனார் மற்றும் சிலர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : AIADMK ,Nellikuppam ,Ambedkar ,Cuddalore ,
× RELATED பண்ருட்டி அருகே பறக்கும் படை சோதனையில் சிக்கிய ஸ்கேன் மெஷின்