×

ஜிம்பாப்வே வீரர் முசராபானிக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை

மும்பை: பிஎஸ்எல் தொடரிலிருந்து ஐபிஎல்லுக்கு மாறிய ஜிம்பாப்வே வீரர் முசராபானிக்கு, 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 19வது சீசன் களைகட்டியுள்ளது. இதில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதனிடையே, கொல்கத்தா அணியில் விளையாட இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானின் ஒப்பந்தம், பல்வேறு தரப்பு எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இவருக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட ஜிம்பாப்வே வீரர் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசராபானி, தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பு பாகிஸ்தானில் நடந்து வரும் பிஎஸ்எல் தொடரில் முசராபானி விளையாடி வந்தார். அங்கிருந்து ஐபிஎல் தொடருக்கு மாறியதைத் தொடர்ந்து, அவர் 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர், ஆரம்பத்தில் ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் ஆகிய 2 ஏலங்களிலும் விற்கப்படாமல் இருந்தார்.

பிஎஸ்எல்லில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னை அணுகியதையடுத்து, முசராபானி யுனைடெட் அணியுடனான தனது ஒப்பந்தத்தைக் கைவிட்டார். இதன் காரணமாக தற்போது அவருக்கு 2 ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் கார்பின் பாஷ் போட்டித்தொடரில், இதேபோன்ற ஒரு அணி மாற்றத்திற்காக ஓராண்டு தடையை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Musharrafani ,Mumbai ,PSL ,IPL ,India ,Kolkata ,
× RELATED 19 ஆண்டு கால ஐபிஎல்லில் முதல் முறை...