சென்னை: ஐபிஎல் 19வது தொடரின் நேற்றிரவு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் 22வது போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற ெகால்கத்தா பவுலிங்கை தேர்வு செய்ய சென்னை அணியின் ஓப்பனர்களக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் களமிறங்கினார். ருதுராஜ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும் அடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். ஆயுஷ் மாத்ரே 38 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 48 ரன்களில் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த பிரவீஸ் 41 ரன், சர்பராஸ் கான் 23 ரன்னில் அவுட்டாக சிவம் துபே 13 ரன், ஜேமி ஓவர் டன் 7 ரன்னுடன் களத்தில் நிற்க சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னையில் அணியில் நூர் 3, கம்போஜ் 2 விக்கெட் எடுத்தனர். கொல்கத்தாவில் அதிகபட்சமாக ரமன்தீப் 35 ரன் அடித்தார்.
