×

தேவாரம் பகுதியில் கால்நடை தீவனப் பற்றாக்குறை

தேவாரம், ஏப்.11: தேனி மாவட்டத்தில் அதிகமான அளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. குறிப்பாக பால் உற்பத்திக்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மேய்ச்சல் நிலங்கள் கருகத் தொடங்கி விட்டன.

இதனால் கால்நடைகளை வளர்ப்போர் தவித்து வருகின்றனர். தற்போது ஒரு ஆறுதலாக நெல் வயல்களில் சிறு சிறு புற்கள் வளர்ந்துள்ளன. இதனையே மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தி ஆடுகளை மேய்ப்பது தற்போது தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் மழை பெய்தால் மட்டுமே மேய்ச்சலுக்கு தேவையான இயற்கை உணவுகள் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Tags : Thevaram ,Theni district ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...