×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைமையம் வாரந்தோறும் 6 நாள் நடக்கிறது

புதுக்கோட்டை, ஏப்.14: புதுக்ேகாட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் உயர்தர மறுவாழ்வு பயிற்சி வழங்கிட ஒருங்கிணைந்த சேவைமையம் தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரால் முதற்கட்டமாக 10.11.2025 முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உயர்தர மறுவாழ்வு பயிற்சி வழங்கிட ஒருங்கிணைந்த சேவைமையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேற்படி மையம் வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.00 மணி முதல் மாலை4.00 மணி வரை இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தில் காதுகேளாதோர்களுக்கு காது பரிசோதனை செய்தல், கண்பார்வை குறைபாடுடையவர்களுக்கு கண்பரிசோதனை செய்தல், மனவளர்ச்சிகுன்றிய வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, சிறப்புக்கல்வி வழங்குதல், புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, சிறப்புக்கல்வி மற்றும் செயல்முறை பயிற்சியும், துறுதுறு தன்மையுள்ள மற்றும் கவனமின்மை குறைபாடுடைய குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, சிறப்புக்கல்வி மற்றும் செயல்முறை பயிற்சியும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, சிறப்புக்கல்வி மற்றும் செயல்முறை பயிற்சியும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கும் இயன்முறை மருத்துவம் போன்ற உயர்தர மறுவாழ்வு பயிற்சிகள் தகுதியான பயிற்சியாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மேற்படி ஒருங்கிணைந்த சேவைமையத்தினை பயன்படுத்தி உயர்தர மறுவாழ்வு சிகிச்சையினை பெற்றுக்கொள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,District Collector ,Aruna ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...