- திருக்காட்டுப்பள்ளி அனைத்து வணிகர் கூட்டமைப்பு
- Thirukattupalli
- வர்த்தகர்கள் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு
- திருவாரூர்
- ஜனாதிபதி
- தஞ்சாவூர்...
திருக்காட்டுப்பள்ளி, ஏப். 11: திருக்காட்டுப்பள்ளியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருவாரூரில் மே 5ம் தேதி நடைபெற உள்ள வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருக்காட்டுப்பள்ளி அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட செயலாளருமான தியாக.சுந்தரமூர்தி தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் சைவ வரதராஜ் அனைவரையும் வரவேற்றார்.
துணைத்தலைவர்கள் பாண்டியன், சிவாக்கண்ணன், எம்.பி.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் மே மாதம் 5ம்தேதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கடைகளுக்கு விடுமுறை விடுத்து அனைத்து வணிகர்களும் மாநாட்டிற்கு திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயலாளர்கள் சம்சுதீன், செந்தில்குமார், பொருளாளர் கோபி மற்றும் திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.
