×

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” டீசர் வெளியீடு!

டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், தாயை இழந்து தனிமையில் வளர்ந்து மதுவுக்கு அடிமையான இளைஞனின் வாழ்க்கையை காதல் எவ்வாறு மாற்றுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முழுப் படமும் லைவ் சவுண்டிலும், பாடல்கள் அனைத்தும் நேரடி இசைக்கருவிகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டிருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். டி. ஆண்டனியுடன் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Tags : D. Antony ,Madhumita Das ,Jeeva ,
× RELATED உண்மைச் சம்பவங்களின் பின்னணியில்...