×

64வது படம் அறிவிப்பு அஜித்குமாரின் டேர் டெவில்: ஷாலினி தயாரிக்கிறார்

 

சென்னை: கடந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு பிறகு 2வது முறையாக ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்‘ என்ற படத்தில் இணைகிறார் அஜித்குமார். கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்குமார் தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். அஜித்குமாரின் 64வது படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்குவார் முன்னரே அறிவிக்கப்பட்டாலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதன் பணிகள் தொடங்காமல் இருந்தது. அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது. ‘டேர் டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்.

அனிருத் இசை அமைக்கிறார். இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். முதல் முறையாக அஜித் சார்பில் ஷாலினி அஜித் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் படத்தை முடித்து அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அஜித்குமார் தயாரிக்கும் முதல் படம் ‘டேர் டெவில்’ என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா 2’, ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Ajith ,Chennai ,Ajith Kumar ,Adhik Ravichandran ,
× RELATED உண்மைச் சம்பவங்களின் பின்னணியில்...