×

பெரம்பலூர் மனு நீதி முகாமில் 38 மனுக்கள் வருகை தீர்வு காண உத்தரவு

 

பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி லலித்குமார் தலைமை வகித்தார். இந்த சிறப்பு மனுமுகாமில் மாவட்ட எஸ்பி பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (நகரம்), பெரம்பலூர் (ஊரகம்) பாடாலூர், குன்னம், மங்கல மேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு,

பெரம்பலூர் மற்றும் மங்கலமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு மனுமுகாம் மூலம் 38 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கைகாக அனுப்பிவைக்கப்பட்டது.

 

Tags : Perambalur Petition Justice Camp ,Perambalur ,Perambalur SP ,Perambalur District SP ,Lalithkumar ,District SP ,Perambalur… ,
× RELATED கொளக்காநத்தத்தில் பயிர்க்கடனை...