- Jayankondam
- அரியலூர் மாவட்டம்
- துணை இயக்குநர்
- விவசாயம்
- உரம்
- சென்னை
- முதன்மை வேளாண் கூட்டுறவு கடன்
- உதவி இயக்குனர்
- தர கட்டுப்பாடு
- வேளாண் மருத்துவர்
- ராதாகிருஷ்ணன்
ஜெயங்கொண்டம், ஜூலை 30: அரியலூர் மாவட்டத்தில் சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (உரம்) அறிவுரையின்படி வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் டிஏபி உரம் அதிகமாக விற்பனை செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் உரம் விற்பனையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அரியலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது; யூரியா மற்றும் டிஏபி உரங்களை விவசாயிகளின் பயிர் மற்றும் நிலத்துக்கு ஏற்ப மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அடி உரமாக டிஏபிக்கு பதிலாக ட்ரிப்பில் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம். விற்பனை நிலையத்துக்கு வரும் விவசாயிகளிடம் கண்டிப்பாக அவர்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் சமச்சீர் உரம் இடுதல் பற்றி தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.
விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி இணைபொருள்களை வழங்கக் கூடாது . உரம் இருப்பு மற்றும் அதன் விலையை விவசாயிகள் அறியும் பண்ணும் பலகையில் எழுதி பராமரிக்க வேண்டும். உரங்களை பி ஓ எஸ் இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு யூரியா உரங்களை அதிகமாக கொடுக்கக் கூடாது .யூரியா உரங்களை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக பில் முகவரியுடன் விவசாயியின் தொலைபேசி எண்ணுடன் விவசாயின் கையப்பம் பெற்று கொடுக்க வேண்டும். எப்போதும் விற்பனை நிலையத்தில் இருப்பு உரங்கள் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். உரம் வைத்திருக்கும் கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் அதிகபட்ச விலை மாற்றப்பட்டிருந்தால், புதியதாக வரும் உரம் மூட்டைகளை தனியாக பராமரிக்க வேண்டும் .
பழைய உர மூட்டையை தனியாகவும் வைத்திருக்க வேண்டும் உர மூட்டையில் அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது, உரங்களை வேறு மாவட்டத்திற்கு விற்பனை செய்யக் கூடாது. செய்யப்பட்டது என்பதை அறிந்தால் உரம் உரிமம் ரத்து செய்வதுடன் அத்தியாவசிய பொருள் சட்டம் 1955 இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார். மேலும் விவசாயிகள் யூரியா உரத்தை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. அடி உரமாக பயன்படுத்தக்கூடாது ,அடி உரமாக காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும் .எக்காரணத்தைக் கொண்டும் யூரியா உரம் கலைக்கொல்லியுடன் சேர்த்து பயன்படுத்தக் கூடாது .விவசாயிகள் அவர்களின் பயிர் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே யூரியாவை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு யூரியா இரண்டு மூட்டைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். டிஏபி உரங்களும் அதிக அளவு உதவி விவசாயிக்கு வழங்கக்கூடாது ,நானோ யூரியா, நானோ டி ஏ பி விவசாயிகளுக்கு எடுத்து கூறி பயன்படுத்த வேண்டும்.
வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான உயிர் உரங்களையும் ,அனைத்து வகையான பயிருக்கு ஏற்ற நுண் ஊட்டச்சத்து உரங்களை பயன்படுத்துவதால் பயிருக்கு வழங்கப்படும் உரம் அளவை குறைத்து, மண்ணின் வளம் அதிகரித்து உர செலவு குறைத்து அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு அக்ரி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார். இக்கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் விற்பனையாளர்கள் மற்றும் தனியார் உரம் விற்பனையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
