×

கொளக்காநத்தத்தில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

 

பாடாலூர், ஜூலை 30: கொளக்காநத்தத்தில் முழு பயிர்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். பின்னர், முதல்வர், கூட்டுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பும் வகையில், கொளக்காநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளார் வெங்கடேசனிடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் அளித்தனர். இந்த போராட்டத்தில் கொளக்காநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Tags : Kolakanatam ,Patalur ,Tamil Nadu Farmers Protection Association ,Primary Agricultural Cooperative Credit Society ,Alathur taluk, Perambalur district… ,
× RELATED பெரம்பலூர் மனு நீதி முகாமில் 38 மனுக்கள் வருகை தீர்வு காண உத்தரவு