×

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வரவேற்ற நார்வே பத்திரிகையாளர்; “இந்திய இளைஞர்களுக்கான சிறப்பு நாள்” என கருத்து

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை நார்வே பத்திரிகையாளர் ஹீலிங் வரவேற்றுள்ளார். இதை “இந்திய இளைஞர்களுக்கான சிறப்பு மிகு நாள்” என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஜூலை 25 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் காணொளியையும் அவர் பகிர்ந்து, மாணவர் போராட்டத்தின் வெற்றியைப் பாராட்டியுள்ளார்.

இந்திய அரசியல் தொடர்பாக கவனம் ஈர்த்தவர் ஹீலிங். இதற்கு முன்பு, மே மாதத்தில் ஒஸ்லோவில் நடைபெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நார்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரே ஆகியோரின் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், “உலகின் சுதந்திரமான ஊடகங்களின் கேள்விகளுக்கு நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை?” என்று பிரதமர் மோடியிடம் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Dharmendra Pradhan ,Day ,Indian ,Healing ,Union Education Minister ,Miku Day ,Delhi Jander ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி