×

இதமான காலநிலை நிலவிய நிலையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

*சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி : இதமான காலநிலை நிலவிய நிலையில் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள பூங்காக்கள், படகு இல்லங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள அவலாஞ்சி, பைக்காரா, தொட்டபெட்டா சுற்றுலா தலங்களை காண ஆர்வம் காட்டுவார்கள். கோடை சீசன் நிறைவடைந்த நிலையில் வார நாட்களில் வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்ததுள்ளது.

அதே சமயம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில், வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கணிசமான அளவு வந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அதற்கேற்ப ஊட்டியில் வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் அதனை அனுபவித்தபடியே சுற்றி பார்த்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

குழுவாக வந்திருந்தவர்கள் மோட்டார் படகில் பயணித்தனர். இதேபோல் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி – கூடலூர் சாலை மற்றும் நகரில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.

Tags : Botanical Gardens and ,Boat House ,Ooty ,Nilgiris district ,
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகளவு...