×

நீட் மறுதேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனை பெற எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!

சென்னை: நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதையடுத்து மாணவர்கள், மனநல ஆலோசனைகளைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும். 2026-27 கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் நேற்று (16.07.2026) வெளியாகி உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NEET ,Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய...