×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

கரூர், ஜூலை 15: வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தற்காலிக செவிலியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பணியிடங்களை மாற்றி இசிஆர்சி மையங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Tags : Karur ,Nurses Development Association ,Regional Transport Office ,Karur Regional Transport Office ,
× RELATED சட்ட ஆலோசகர் ஒராண்டு கால பணி நிறைவு...