- அரவக்குறிச்சி
- Murukesan
- ஈரோடு மாவட்டம்
- அந்தியூர் தாலுகா
- பாருகூர் அஞ்சல், குட்டயூர் பகுதி
- கரூர் மாவட்டம்
- டென்லாய் காவல்துறை
அரவக்குறிச்சி ஜூலை 15: அரவக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னை காரணமாக கிரஷர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பருகூர் போஸ்ட், குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட மசியம்பாளையம் பகுதியில் உள்ள ‘கந்தன் கிரஷரில் கடந்த ஒரு மாத காலமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு முருகேசன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு நீண்ட நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் இன்பராஜ் என்பவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, முருகேசன் தனது வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் உடலை கைபற்றி கரூர் அரசு மருத்துவமனைக்குக் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
