×

மாதவரம் தபால்பெட்டி பகுதியில் எலக்ட்ரிக்கல் குடோனில் தீ: ஊழியர்கள் உயிர் தப்பினர்

மாதவரம்: சென்னை மாதவரம் தபால்பெட்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல், பிளாஸ்டிக் செராமிக் மூலப் பொருட்கள் மற்றும் பழைய பைக்குகள் வைக்கும் குடோன்கள் உள்ளது. 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை எலக்ட்ரிக்கல் குடோனில் தீப்பிடித்து எரிவது பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ எலக்ட்ரிக்கல் பொருட்கள் மீது பிடித்து வேகமாக பரவியதால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடிவந்து விட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாதவரம், மணலி ஆகிய பகுதியில் இருந்து 4 வண்டிகளில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரைந்தனர். பின்னர் அவர்கள் ரசாயன நுரை மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அடுத்தடுத்து 4 குடோன்களுக்கு தீ பரவியதால் தீயை அணைக்க தீவிரமாக போராடினர். தீயில் இருந்து வெளியேறிய புகையால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு புகை மண்டலமாக மாறி மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிப்பட்டு உள்ளனர்.

தபால் பெட்டி பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானார்கள். மேலும் இந்த தீ விபத்து காரணமாக தபால் பெட்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags : Electrical ,Kudon ,Matawaram ,Madhavaram ,Chennai ,Madhavaram Postalpetty Road ,
× RELATED அம்பேத்கர் சிலைக்கு மட்டும்...