சென்னை: தமிழகத்தில் 2031-க்குள் 20,000 பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மின் வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு. EV சார்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின்மீட்டர் அமைக்க முடிவு. மின் வாகன கொள்கையில் திருத்தங்கள், கட்டணச் சலுகைகள் குறித்து பரிந்துரை செய்துள்ளது.
