×

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?- திமுக கேள்வி

சென்னை: பணிகளை பார்வையிட வரும் முதல்வர் விஜய்க்காக திட்டத்தை தொடங்கிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கல்வெட்டு அகற்றப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. “நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கிய கல்வெட்டை அகற்றி தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கிவைத்த அடிக்கல்லை அகற்றுவது தவெக அரசின் பயபீதியை காட்டுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் மீது தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு வெட்கமாக இல்லையா?’ என தவெக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.

2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?” என திமுக தெரிவித்துள்ளது.

Tags : Vijay Rase ,Dimuka ,Chennai ,Chief Minister ,Stalin ,Vijay ,Nemmeli ,
× RELATED பெண்களுக்கு எதிரான வன்முறையை...