- பிளிஸ்கோவா
- விம்பிள்டன்
- லண்டன்
- செ குடியரசு
- கரோலினா பிளிஸ்கோவா
- விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்
- தெரசா வாலண்டினா
லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில் சக வீராங்கனை தெரசா வாலென்டோவா உடன் மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் களமிறங்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வடக்கு மேசடோனியா வீராங்கனை லினா ஜார்செஸ்காவை எளிதாக வீழ்த்தினார்.
இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி ராபின் மான்ட்கோமரி (அமெரிக்கா) மோதிய முதல் சுற்று போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்து 2 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது. இப்போட்டியில் பவோலினி 0-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க வீராங்கனைகள் கேலா டே மேடிசன் கீஸ் மோதிய முதல் சுற்று போட்டியில் கீஸ் 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 28 நிமிடம் போராடி வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 7-6 (7-5), 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ரோமன் புர்ருசகாவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். நகஷிமா (யுஎஸ்), மன்னரினோ (பிரான்ஸ்), யானிக் ஹான்ப்மேன் (ஜெர்மனி), வேலன்டின் ரோயர் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் முன்னணி வீரர்கள் யானிக் சின்னர் (இத்தாலி), நோவக் ஜோகோவிச் (செர்பியா), டானிம் மெட்வதேவ் (ரஷ்யா), ஆகர் அலியஸ்ஸிமி (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிட த்தக்கது.
