×

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் மரணம்

சென்னை: தமிழ் திரைப்பட துறையின் முன்னணி ஒளிப்பதிவாளரும், இயக்குனரும், கவிஞரும், எழுத்தாளருமான செழியன் (50), நேற்று காலை உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களாக சென்னை தரமணியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையிலகினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தமன்னா நடித்த ‘கல்லூரி’, கே.பாலசந்தருடன் பாரதிராஜா நடித்த ‘ரெட்டச்சுழி’ மற்றும் ‘மகிழ்ச்சி’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, பாலா இயக்கிய ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’ மற்றும் ‘சவாரி’, ‘ஜோக்கர்’, ‘டூ லெட்’, ‘கொன்றால் பாவம்’, ‘மயிலாஞ்சி’ போன்ற படங்களுக்கு சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருந்த செழியன், எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்த ‘டூ லெட்’ என்ற படம், 65வது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது வென்றது.

தமிழ்நாட்டில் சிவகங்கையில் பிறந்த செழியன், கட்டிட பொறியியல் படிப்பை முடித்தார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தனது சினிமா பயிற்சி பள்ளியின் மூலம் பயின்ற 34 மாணவர்கள், ஒரே நேரத்தில் 34 சுயாதீன திரைப்படங்களை இயக்கும் புதிய முயற்சியை சமீபத்தில் செழியன் தொடங்கி வைத்தார்.

Tags : Chezhiyan ,Chennai ,Taramani, Chennai ,Tamannaah ,K. Balachander ,Bala ,
× RELATED துல்கர் சல்மான் பூஜா ஹெக்டேவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’