×

ராவ் பகதூர் விமர்சனம் தெலுங்கு

புவனாலயம் என்ற தனது அரண்மனையில், நோய் வாய்ப்பட்ட அரசு குடும்ப வாரிசாக இருக்கிறார் ராமப்பா ராவ் பஹதூர். அவரது மனைவி ரேணுகா பல ஆண்டுகளாக அவருடன் பேசாமல் வேறொரு அறையில் இருக்கிறார். ஒருநாள் ராவ் பஹதூரின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் கிடைக்க, அவரது நண்பரான மருத்துவர் ஆச்சாரி அரண்மனைக்கு வருகிறார். அப்போது தனது சந்தேகம் ஒன்றை ரகசியமாக ராவ் பஹதூர் மருத்துவரிடம் சொல்ல, அவர் அதிர்கிறார். அது என்ன? அதற்கு விடை கிடைத்ததா என்பதுதான் முழு படமும்.

கேர் ஆஃப் கஞ்சரபாலம் படம் மூலம் கவனம் ஈர்த்த வெங்கடேஷ் மஹா இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதி சைக்கோலாஜிக்கலாக கதை நகர்கிறது. 1968யின் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் எதிர்பாராத சில விஷயங்கள் நடக்க, கடைசி அரைமணிநேரம் படம் அப்ளாஸ் அள்ளுகிறது. கலையமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ஆகியவை சேர்ந்து நம்மை 90கள் மற்றும் 70கள் காலகட்டத்திற்கு கொண்டு செல்ல, முழுப்படம் பார்த்து முடித்த பிறகு வேறொரு காலத்தில் வாழ்ந்த உணர்வை பெறுவது உறுதி.

ராமப்பா ராவ் பஹதூராகவே சத்யதேவ் வாழ்ந்திருக்கிறார். வயதான கதாபாத்திரத்தை அவர் நடிப்பில் காட்டிய விதம் சிறப்பு. தீபா பிளேஷ்பேக்கில் நம்மை ஆட்கொள்கிறார். ஆச்சாரியாக வரும் விகாஸ் முப்பாலா ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் வியப்பூட்டுகிறார். அச்சம்மாவாக வரும் பாலா பரசர் காமெடியில் ஸ்கோர் செய்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாக வரும் ஆனந்தும் கலக்குகிறார். சமரன் சாயின் இசை, கார்த்திக் பர்மரின் ஒளிப்பதிவு கச்சிதம். இயக்குனரான மஹா படத்தொகுப்பாளராகவும் வேலை பார்த்திருக்கிறார். நல்ல டைம் பாஸ் படமாக இதை ரசிக்கலாம்.

Tags : Ramappa Rao Bahadur ,Bhuanalayam ,Renuka ,Rao Bahadur ,Achari ,
× RELATED ஆபாசம் எதிர்பார்த்து இன்ஸ்டா பக்கம்...