- மானூர் மாவட்டம்
- விவசாயிகள் சங்கம்
- கலெக்டர்
- நெல்லை
- நெல்லை மாவட்ட அனைத்து விவசாயிகள் மேம்பாட்டு சங்கம்
- Manur
* கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு
நெல்லை : மானூர் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு, காப்பீடு வழங்க கேட்டு நெல்லை மாவட்ட அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் மூவி சுந்தர் தலைமையில் விவசாயிகள், நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை அருகே மானூர் வட்டார பகுதியில் கடந்த 2025=26ம் ஆண்டில் உளுந்து பயிர்கள் முழுவதும் பாதிப்படைந்த காரணத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. பாதிப்படைந்த உளுந்து பயிருக்கு உரிய இழப்பீடு கேட்டு பல முறை வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரியிடம் மனு அளித்து விட்டோம்.
எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு தொகையும் காப்பீடு நிறுவனத்தால் வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையும் வழங்கட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் விவசாயிகள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
