டூவீலர் திருடிய ெதாழிலாளி கைது

 

சேலம், ஆக.4: ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அசோகன் (45). காய்கறி வியாபாரி. இவர் கருப்பூர் சந்தைப்பேட்டைக்கு அவரது டூவீலரில் வந்திருந்தார். வியாபாரம் முடிந்த நிலையில், அங்கு நிறுத்தியிருந்த டூவீலரை காணவில்லை. இதுகுறித்து கருப்பூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசாரின் விசாரணையில், குள்ளகவுண்டனூர் 3வது வார்டை சேர்ந்த சேட்டு (44) என்பவர் டூவீலரை திருடிச்சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சேட்டுவை கைது செய்து டூவீலரை மீட்டனர்.

Related Stories: