குட்கா விற்ற முதியவர் கைது

 

சேலம், ஆக. 3:சேலம் மாநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அன்னதானப்பட்டி போலீஸ் எஸ்ஐ அர்த்தநாரி, நேற்று முன்தினம் மதியம் மணியனூர் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் ஒரு கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், விற்பனையில் ஈடுபட்ட மணியனூரைச் சேர்ந்த முகமது இமாமுதீன் (60) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: