×

காவிரி விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படும் தவெக அரசு – டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை: காவிரி விவகாரத்தை பொறுத்த வரை தவெக அரசின் செயல்பாடுகள் “சிறுபிள்ளைத்தனமாக உள்ளது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்து உள்ளார். ய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய டிடிவி தினகரன் 40, 50 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்தவர்களின் அனுபவங்களை எடுத்து கொள்ளாமல், அவர்களின் ஆலோசனைகளை கேட்காமல், தவிர அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டாமல் தவெக அரசு செயல்படுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

காவிரி பிரச்சனையில் எதிர்க்கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ஆட்சி அமைப்பதற்கு அவர்கள் செய்த தில்லுமுல்லுக்கள், களவாணித்தனங்களால் திமுக தலைவரையும், அதிமுக பொதுச் செயலாளரையும் சந்திக்க தயக்கம் இருக்கலாம். இந்த காரணத்தினால் கூட அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் தவெக அரசு தவிர்க்க நினைக்கலாம்.

கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் தயங்குவது மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்காதது போன்ற செயல்கள் வருங்காலத்தில் தவறான ஒரு முன்னுதரணத்தை ஏற்படுத்தி விடலாம் என்றும் டிடிவி தினகரன் விமர்சித்து உள்ளார்.

 

Tags : TTV ,Dinakaran ,Teva government ,Chennai ,AMMK ,general secretary ,Public Works Department ,Water Resources Department ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு