×

நீர் வறட்சியால் சோகத்தில் ஆழ்ந்துள்ள சேத்தியாத்தோப்பு பகுதி கிராம மக்கள்

*பாரம்பரிய ஆடிப்பெருக்கு அவல் இடிக்கும் பணியில் தொய்வு

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி கிராமத்தில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பாரம்பரியமான அவல் இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் புது நெல்லை இங்கு கொண்டு வந்து அவல் இடித்துச் செல்கின்றனர்.

ஆடி 18 விழாவை உற்சாகமாகக் கொண்டாட மக்கள் அதிகாலை 3 மணி முதல் தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்து அவல் இடித்துச் செல்கின்றனர். மின் தடை ஏற்பட்டாலும், ஜெனரேட்டர் வசதி மூலம் தொடர்ந்து அவல் இடித்துக் கொடுக்கப்படுகிறது.

இப்பகுதியில் நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு போயிருப்பதால் விவசாயம் பொய்த்துப் போயுள்ளது. நெல் அறுவடை செய்ய முடியாததால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த ஆண்டு அவல் இடிக்க வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீரே வாழ்வாதாரம், நீர்தான் விவசாயத்தின் ஆணிவேர் எனக் குறிப்பிடும் விவசாயிகள், வழக்கமான பாரம்பரிய உற்சாகம் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவில் இல்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, வருங்காலங்களிலாவது நீர்நிலைகளில் முழுமையாக தண்ணீர் கிடைக்க செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க, ஆடிப்பெருக்கு விழாவை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Setiathopu ,Boodangudi ,Setiathopu, Cuddalore district ,Adipere Festival ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...