×

குடிநீர் கேட்டி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

 

செங்கல்பட்டு: குடிநீர் கேட்டி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரையப்பாக்கம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக குடிநீருக்கும், விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்

பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்காதல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் 200 ரூபாய் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். எனவே தண்ணீர் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Katie Chengalpattu ,Chengalpattu ,Arayapakkam ,Madurandkam ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...