நாகூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நாகூர் அருகே
கஞ்சா விற்ற வாலிபர் கைது

நாகப்பட்டினம், ஆக. 3: நாகூர் அருகே மேலவாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற வரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது விற்பனைக்கு மறைந்து வைத்திருத்த கஞ்சா பொட்டலங்கள் 1 கிலோ 100 கிராமை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் திருச்சி கருமாரியம்மன் நகரை சேர்ந்த ஜோசப்(39) என்பது தெரிய வந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப்பை கைது செய்தனர். மேலும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: