×

ஆண்கள் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா; யஷ்வீருக்கு வெண்கலம்

 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் யஷ்வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா நடப்பு சீசனில் தனது சிறந்த அளவாக 85.83 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.
யஷ்வீர் சிங் தனது மிகச் சிறந்த செயல்பாட்டை பதிவு செய்து (85.41 மீட்டர்) 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அபாரமாக செயல்பட்ட இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே (89.75) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். வேகப் பந்துவீச்சாளரான இவர் தடகளத்தின் மீதான ஆர்வத்தால் ஈட்டி எறிதலில் களமிறங்கி அசத்தியுள்ளார். பைனலில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ரோகித் யாதவ் (81.56 மீ.) 7வது இடத்துடன் திருப்தி அடைந்தார். வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்த நீரஜ், யஷ்வீருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Neeraj Chopra ,Yashvir ,throw ,Commonwealth Games ,Yashvir Singh ,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு:...