×

காமன்வெல்த் விளையாட்டு: குண்டு எறிதலில் சோமன் ரானா தங்கமும், ஷுபம் ஜூயல் வெள்ளியும் வென்று அசத்தல்!

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மாற்றுத்திறனாளி தடகளப் பிரிவு ஆண்களுக்கான குண்டு எறிதல் (F57) போட்டியில் இந்திய வீரர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் இந்திய வீரர் சோமன் ரானா மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரான ஷுபம் ஜூயல் தனது சிறப்பான திறமையால் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த நிகழ்வு, விளையாட்டு வட்டாரங்களிலும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Tags : Commonwealth Games ,Soman Rana ,Shubham Jewel ,F57 ,2026 Commonwealth Games ,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு:...