காமன்வெல்த் ஆண்கள் குத்துச்சண்டை 55 கிலோ எடை பிரிவு பைனலில் ஆஸ்திரேலியாவின் ஜை டிக்சனுடன் மோதிய இந்திய வீரர் ஜடுமானி சிங் (மணிப்பூர்), கடுமையாகப் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். முதல் சுற்றில் ஜடுமானி 3-2 என முன்னிலை பெற்றாலும், அடுத்த 2 சுற்றிலும் அசத்திய டிக்சன் நடுவர்களின் ஒருமித்த முடிவில் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கம் இது.
